உள்நாட்டு தளவாட உற்பத்தியில் எம்எஸ்எம்இ நிறுவனங்களை ஊக்குவிப்பது மிக அவசியம்: ராணுவத்துறை செயலாளர் 

உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி முயற்சிகளை விரைவுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்று ராணுவத்துறை செயலாளர் ராஜேஷ்குமார் சிங் தெரிவித்தார்.

Dec 28, 2024 - 00:05
 0  4
உள்நாட்டு தளவாட உற்பத்தியில் எம்எஸ்எம்இ நிறுவனங்களை ஊக்குவிப்பது மிக அவசியம்: ராணுவத்துறை செயலாளர் 

கோவை: “உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி முயற்சிகளை விரைவுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்” என்று ராணுவத்துறை செயலாளர் ராஜேஷ்குமார் சிங் தெரிவித்தார்.

கொடிசியா டிபென்ஸ் இன்னோவேஷன் மற்றும் அடல் இன்குபேஷன் மையம் (சிடிஐஐசி) சார்பில் ராணுவம் சார்ந்த தொழில்களுக்கான கூட்டம் கொடிசியா வர்த்தக தொழிற்காட்சி வளாகத்தில் இன்று (டிச.27) நடந்தது. ராணுவத் தளவாட தொழிலில் முக்கிய பங்கு வசிக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ராணுவ புத்தாக்க நிறுவனம், ராணுவம் மற்றும் ராணுவம் சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் வகையில் இக்கூட்டம் நடத்தப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow