பனை கனவுத் திருவிழா - விழுப்புரத்தில் கண்களுக்கு விருந்து படைத்த ‘பாரம்பரியம்’

தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 4-ம் ஆண்டு ஆறாம் தினை பனை கனவுத் திருவிழா விழுப்புரம் அடுத்த நரசிங்கனூர் கிராமம் பனங்காடு என்ற இடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. 

May 24, 2025 - 23:10
 0  4
பனை கனவுத் திருவிழா - விழுப்புரத்தில் கண்களுக்கு விருந்து படைத்த ‘பாரம்பரியம்’

விழுப்புரம்: தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 4-ம் ஆண்டு ஆறாம் தினை பனை கனவுத் திருவிழா விழுப்புரம் அடுத்த நரசிங்கனூர் கிராமம் பனங்காடு என்ற இடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். பனைக்கு மாபெரும் படையர் ஊர்வலம் நடைபெற்றது. மாரியம்மன் கோயில் தெருவில் இருந்து புறப்பட்டு, விழா நடைபெறும் பனங்காடு பகுதியை வந்தடைந்தது. பனையில் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் கள் உள்ளிட்டவற்றை பெண்கள் பானையில் சுமந்து வந்தனர். பின்னர், பனங்காடு என்ற இடத்தில் பனைமரத்தின் முன்பு வைத்து படையலிட்டு வழிபட்டதும், பனையேறிகள் அணிவகுப்பு நடைபெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow