Asperger Syndrome - ‘பில்கேட்ஸ் எதிர்கொண்ட இந்தப் பிரச்சினை’யின் அறிகுறிகளும் தாக்கமும்
“என் அப்பாவுக்கு ஆஸ்பெர்கர் சிண்ட்ரோம் இருக்கிறது” என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸின் மகள் ஃபீப் கேட்ஸ் வெளிப்படுத்தியுள்ளார். இப்பிரச்சினையின் அறிகுறிகள் முதல் தாக்கங்கள் வரை சற்றே விரிவாகப் பார்ப்போம்.

வாஷிங்டன்: “என் அப்பாவுக்கு ஆஸ்பெர்கர் சிண்ட்ரோம் இருக்கிறது” என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸின் மகள் ஃபீப் கேட்ஸ் வெளிப்படுத்தியுள்ளார். இப்பிரச்சினையின் அறிகுறிகள் முதல் தாக்கங்கள் வரை சற்றே விரிவாகப் பார்ப்போம்.
‘கால் ஹெர் டாடி’ (Call Her Daddy) என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் ஃபீப் கேட்ஸ் இதனைத் தெரிவித்துள்ளார். 22 வயதான ஃபீப் தனது தந்தையின் ஆஸ்பெர்கர் சிண்ட்ரோமால் தான் எதிர்கொண்ட அனுபவங்களை அந்த நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார். ஒருமுறை தான் தனது தந்தையை சந்திக்க தன்னுடைய நண்பர்களை வீட்டுக்கு அழைத்துவந்தபோது நேர்ந்த அனுபவங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். “எனது நண்பர்களுக்கு அது ஒரு திகில் அனுபவம். ஆனால், எனக்கு அதுவொரு நகைப்புக்குரிய அனுபவம்... என் தந்தை பிறருடன் பழகுவதில் ஆர்வம் காட்டாதவர் என்பது எனக்குத் தெரிந்ததால்” என்று குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?