அவிநாசி அருகே வரலாற்று கால கல்லாயுத தொழிற்சாலை கண்டுபிடிப்பு
புதிய கற்கால பண்பாட்டு காலத்தை சேர்ந்ததாக அறியப்படும் இவ்வகை தொல்லியல் சான்றுகள் வடதமிழகம், தென் தமிழகத்தில் சில இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் தத்தனூர் அடிபெருமாள் கோயில் வளாகம், ராயர்பாளையம் வண்ணாம் பாறை சிறிய மலைக் குன்று ஆகிய இடங்களில் வரலாற்று காலத்தை சேர்ந்த கல்லாயுதங்களை கூர்தீட்டும் உற்பத்தி தொழிற்சாலையாக கருதப்படும் இடங்கள் கண்டறியப் பட்டுள்ளன.
இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட யாக்கை மரபு அறக்கட்டளை குழுவினரும், யாக்கை நூலகத்தில் கல்வி உள்ளகப் பயிற்சி பெற்றுவரும் மாணவர்கள் அடங்கிய குழுவினரும் மேற்கண்ட பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
What's Your Reaction?