மூச்சுக்குழாய் நோய்களை எளிதில் கண்டறிய மதுரை அரசு மருத்துவமனையில் அதிநவீன நுரையீரல் ஆய்வுக் கூடம்
தென் தமிழகத்திலேயே முதல் முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அதி நவீன நுரையீரல் ஆராய்ச்சி கூடம் தொடங்கப்பட்டுள்ளது. மூச்சுக்குழாய்களை எளிதில் கண்டறியக்கூடிய இந்த ஆராய்ச்சிக் கூடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் இன்று (அக்.22) திறந்து வைத்தார்.

மதுரை: தென் தமிழகத்திலேயே முதல் முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அதி நவீன நுரையீரல் ஆராய்ச்சி கூடம் தொடங்கப்பட்டுள்ளது. மூச்சுக்குழாய்களை எளிதில் கண்டறியக்கூடிய இந்த ஆராய்ச்சிக் கூடத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் இன்று (அக்.22) திறந்து வைத்தார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அதி நவீன கேத் லேப், நவீன சமையல் கூடம், அதி நவீன ஒருங்கிணைந்த நுரையீரல் ஆராய்ச்சி கூடம் போன்றவற்றின் திறப்பு விழா இன்று நடந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கலந்து கொண்டு இந்த புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தனியார் நிறுவனங்களின் சிஎஸ்ஆர் நிதி ஆதாரத்தில் ரூ.7 கோடியே 9 லட்சம் மதிப்பீட்டில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கேத் லேப் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படக்கூடிய இந்த கேத் லேப்பில் நெஞ்சுவலி நோயாளிகள் சுமார் 20 பேருக்கு சிகிச்சை அளிக்கலாம். தென் மாவட்ட மக்களுக்கு இந்த கேத் லேப் மிகவும் உபயோகமாக இருக்கும்.
What's Your Reaction?