அணு உலை தகர்ப்புக்கு பதிலடி: இஸ்ரேலின் முக்கிய இடங்களை தாக்கிய ஈரான் ஏவுகணைகள் - 32 பேர் காயம்

ஈரானின் அராக் நகரில் உள்ள அணுஉலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் அதற்குப் பதிலடியாக ஈரான் கடும் ஏவுகணைத் தாக்குதலை இஸ்ரேல் மீது கட்டவிழ்த்துள்ளது.

Jun 19, 2025 - 13:55
 0  4
அணு உலை தகர்ப்புக்கு பதிலடி: இஸ்ரேலின் முக்கிய இடங்களை தாக்கிய ஈரான் ஏவுகணைகள் - 32 பேர் காயம்

டெல் அவிவ்: ஈரானின் அராக் நகரில் உள்ள அணு உலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடியாக ஈரான் பெரிய அளவில் ஏவுகணைத் தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தியுள்ளது. மத்திய மற்றும் தெற்கு இஸ்ரேலில் நான்கு இடங்களில் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இஸ்ரேலின் பிரபல மருத்துவமனையான சொரோகா மருத்துவமனையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தலைநகர் டெல் அவிவில் உள்ள பங்குச்சந்தை கட்டிடம் தாக்குதலுக்கு உள்ளானது.

சொரோகா மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “மருத்துவமனைக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பலரும் காயமடைந்துள்ளனர். இந்த மருத்துவமனைக்கு இனி சிகிச்சைக்காக யாரும் வர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.” என்றார். 1000 படுக்கைகள் வசதி கொண்ட இந்த மருத்துவமனை தெற்கு இஸ்ரேலைச் சேர்ந்த 10 லட்சம் பேருக்கு மருத்துவ சேவை வழங்கிவந்தது. இந்த மருத்துவமனை மீதான தாக்குதல், இஸ்ரேல் அரசுக்கு கடும் அதிர்ச்சியைக் கடத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow