குகேஷ், மனு பாக்கர் உள்பட 4 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு!
விளையாட்டுத்துறையில் சாதித்தவர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான கேல் ரத்னா விருது துப்பாக்கி சுடுதல் வீரர் மனு பாக்கர் மற்றும் உலக செஸ் சாம்பியன் டி. குகேஷ் உட்பட நான்கு பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி: விளையாட்டுத்துறையில் சாதித்தவர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான கேல் ரத்னா விருது தமிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் டி.குகேஷ் மற்றும் துப்பாக்கி சுடுதல் வீரர் மனு பாக்கர் உட்பட 4 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய விளையாட்டுத்துறை இன்று இதனை அறிவித்துள்ளது. ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்றிருந்த மனு பாக்கரின் பெயர் இப்பட்டியலில் முதலில் விடுபட்டிருந்தது.
ஜனவரி 17ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற இருக்கும் விழாவில், மனு பாக்கர், குகேஷுடன் இணைந்து இந்திய ஆண்கள் ஹாக்கி அணித் தலைவர் ஹர்மன்ப்ரீத் சிங் மற்றும் பாரா ஒலிம்பிக் வீரர் பிரவீன் குமார் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இந்த விருதினை வழங்குகிறார்.
What's Your Reaction?