சிட்னி டெஸ்ட்டில் ரோஹித் சர்மா நீக்கம்? - ஆகாஷ் தீப் இல்லை!

பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரைச் சமன் செய்யும் வாய்ப்புடன் நாளை (ஜன.3) சிட்னியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்த்துக் களமிறங்குகிறது. இந்திய அணியில் தீவிர மாற்றமாக ரோஹித் சர்மா உட்கார வைக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.

Jan 2, 2025 - 16:35
 0  5
சிட்னி டெஸ்ட்டில் ரோஹித் சர்மா நீக்கம்? - ஆகாஷ் தீப் இல்லை!

பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரை சமன் செய்யும் வாய்ப்புடன் நாளை (ஜன.3) சிட்னியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்த்துக் களமிறங்குகிறது. இந்திய அணியில் தீவிர மாற்றமாக ரோஹித் சர்மா உட்கார வைக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

சிட்னியில் வென்றால் தொடர் 2-2 என்று சமன் ஆகி பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர்ந்து இந்தியாவிடம் இருக்கும். 10 ஆண்டுகளாக இந்தியாவிடம் தான் பார்டர் கவாஸ்கர் டிராபி உள்ளது. சிட்னியில் தோற்றால் ஏன் டிரா ஆனால் கூட ஆஸ்திரேலியா நம்மிடமிருந்து டிராபியைப் பறித்துக் கொள்ளும் சூழ்நிலை உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow