அதிபரின் திருடுபோன கைகள் - ஜுவான் பெரோன் | கல்லறைக் கதைகள் 6
தொழிலாளர்கள் கையில்தான் சகல அதிகாரங்களும் வசதிகளும் இருக்க வேண்டும் என்னும் அடிப்படையில், ஜுவான் டொமிங்கோ பெரோன் புதியதொரு இயக்கத்தைத் தொடங்கினார். அவரது கொள்கைகள் ‘பெரோனிசம்’ எனப்பட்டன.

ஜுவான் டொமிங்கோ பெரோன்! அர்ஜெண்டினா மக்கள் மனதில் இருந்து அழிக்க முடியாத பெயர். ஒரு காலத்தில் அர்ஜெண்டினா, உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக இருந்தது. ஆனாலும், சமமான, ஏற்றத்தாழ்வற்ற சமூகமாக இல்லை. 1945 வரை ராணுவத்தினர் மற்றும் பணக்காரர்களின் ஆதரவைப் பெற்ற குறிப்பிட்ட சிலரின் கையில்தான் அதிகாரம் இருந்தது.
புதிய இயக்கம்: ராணுவத்தில் பெரிய பதவியில் இருந்த பெரோன், ராணுவ ஆட்சியில் தொழிலாளர் நலத் துறை மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தார். 1944ஆம் ஆண்டு மிகப்பெரிய நில நடுக்கம் ஏற்பட்டது. அதில் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துபோனார்கள். மீட்பு நடவடிக்கைகளுக்காக நிதி திரட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத் துறை அமைச்சரான பெரோன் கலந்துகொண்டார். இதே நிகழ்ச்சியில் நடிகையான இவாவும் கலந்து கொண்டார். இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது. விரைவில் காதலர்களானார்கள். இருவரும் சேர்ந்துவாழத் தொடங்கினர். பெரோனுக்கு 48 வயது. இவாவுக்கு வயது 24.
What's Your Reaction?