தாய்க்கு மணிமண்டபம் கட்டிய மகன்கள் - ராமநாதபுரத்தில் நெகிழவைத்த திறப்பு விழா!
ராமநாதபுரத்தில் மறைந்த தங்களது தாயின் நினைவாக முழு உருவ சிலையுடன் மணி மண்டபத்தை மகன்கள் கட்டியுள்ளனர். இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மறைந்த தங்களது தாயின் நினைவாக முழு உருவச் சிலையுடன் மணி மண்டபத்தை மகன்கள் கட்டியுள்ளனர். இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் வ.உ.சி நகர் கணிக்கர் தெருவைச் சேர்ந்த முத்து மனைவி ராஜாத்தி (55). இவர் கடந்தாண்டு ஜன.26 அன்று உடல் நலக்குறைவால் இறந்தார். இவரது மகன்கள் ரவி ராவுஜி, ஹரி ராவுஜி, சுதன் ராவுஜி ஆகிய 3 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். ராஜாத்தி தனது பிள்ளைகளுடன் சிறிய வீட்டில் வாழ்ந்தார். ராஜாத்தியின் 3 மகன்களும் ஜோதிடம் பார்க்கும் தொழில் செய்கின்றனர். தாயின் நினைவாகவும், தாய் இந்த இவ்வுலகில் எவ்வளவு முக்கியமானவர் என்பதை மற்றவர்களும் உணரும் வகையில் கணிக்கர் தெருவில் புதிய வீடு கட்டி, வீட்டின் முன் ராஜாத்தியின் முழு உருவத்தில் ஃபைபர் சிலையுடன் கூடிய மணிமண்டத்தை மகன்கள் மூவரும் சேர்ந்து கட்டியுள்ளனர்.
What's Your Reaction?