பொதுத் தேர்வுகளில் சாதிக்கும் கோவை சிறைக் கைதிகள்!
கல்வி கற்பதில் கவனம் செலுத்தி பொதுத்தேர்வுகளில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று கோவை மத்திய சிறைக் கைதிகள் சாதித்து வருகின்றனர்.

கோவை: கல்வி கற்பதில் கவனம் செலுத்தி பொதுத்தேர்வுகளில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று கோவை மத்திய சிறைக் கைதிகள் சாதித்து வருகின்றனர்.
சிறைச்சாலைகள் என்பது சித்ரவதைக் கூடங்கள் அல்ல. கைதிகள் தங்களது தவறை உணர்ந்து, திருந்தி வெளி வர தங்களை மாற்றிக் கொள்ளும் இடமாகும். சிறைகளில் கைதிகளுக்கு கல்வி கற்பித்தல், வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் வகையில் தொழில்களை கற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
What's Your Reaction?