கல்லூரிகளில் பயிலும் திருநர்களுக்கு தனி விடுதிகளை ஏற்படுத்த அரசுக்கு கோரிக்கை

கல்லூரிகளில் படிக்கும் திருநங்கை, திருநம்பிகளுக்கு தனி விடுதிகள் ஏற்படுத்தவேண்டும் என  தேசிய திருநங்கைகள் தின விழாவில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

Apr 15, 2025 - 19:40
 0  4
கல்லூரிகளில் பயிலும் திருநர்களுக்கு தனி விடுதிகளை ஏற்படுத்த அரசுக்கு கோரிக்கை

மதுரை: கல்லூரிகளில் படிக்கும் திருநங்கை, திருநம்பிகளுக்கு தனி விடுதிகள் ஏற்படுத்தவேண்டும் என தேசிய திருநங்கைகள் தின விழாவில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

மதுரையில் தேசிய திருநங்கைகள், திருநம்பிகள் தினம் இன்று கொண்டாடப்பட்டது. எழுத்தாளர் திருநங்கை. பிரியா பாபு தலைமை வகித்தார். ஷாலினி வரவேற்றார். தனியார் அறக்கட்டளையின் நிறுவனர் குரு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மதுரை மாவட்ட சமூகநலத்துறை அதிகாரி திலகா, சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர் முத்துக்குமார், அண்ணா கல்லூரி நிறுவனர் அண்ணாதுரை உட்பட சிலர் பங்கேற்றனர். திருநங்கையர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow