நீலகிரி மாவட்டத்தின் முதல் பெண் நடத்துநர் நியமனம்!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சோலூர்மட்டம் பகுதியை சேர்ந்தவர் சுகன்யா. இவரது கணவர் கருப்பசாமி. இவர்களுக்கு யுகேஜி படிக்கும் சஷ்டிகா மற்றும் காருண்யா (2) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.

கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சோலூர்மட்டம் பகுதியை சேர்ந்தவர் சுகன்யா. இவரது கணவர் கருப்பசாமி. இவர்களுக்கு யுகேஜி படிக்கும் சஷ்டிகா மற்றும் காருண்யா (2) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். கோவை மண்டலத்தின் கோத்தகிரி கிளையில் நடத்துநராக கருப்பசாமி பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், மாரடைப்பால் அவர் உயிரிழந்ததால், கருணை அடிப்படையில் வேலை கேட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சுகன்யா கோரிக்கை மனு அனுப்பினார். அதில், ஓட்டுநர் பணி தவிர்த்து வேறு எந்த பணி வழங்கினாலும் சிறப்பாக மேற்கொள்வதாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, சுகன்யாவுக்கு கருணை வேலை வழங்க போக்குவரத்து அமைச்சர் சிவசங்கருக்கு முதல்வர் பரிந்துரைத்தார். அதன்படி, சுகன்யாவின் கல்வித் தகுதிக்கேற்ப அவருக்கு உடனடியாக கருணை பணி வழங்க, போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
What's Your Reaction?