ராதிகா ஆப்தே போட்டோஷூட் பதிவு சொல்வது என்ன? - கர்ப்ப கால கடினங்கள் மீதான பார்வை தேவை!
ராதிகா ஆப்தேவின் இஸ்டாகிராம் பதிவின் மூலம் புத்தொளி பாய்ச்சப்பட்டிருக்கும் கர்ப்ப கால கடினங்களைப் பற்றியும் இனி பொது வெளியில் அதிகம் பேசினால் அதன் மீது பொதுபுத்தியில் படிந்துள்ள பார்வைகளை மாற்றுவதோடு தீர்வுகளையும் காணலாம்.

பூப்பெய்தல், தாய்மை அடைதல் என ஒரு பெண் வாழ்வில் உடல் சார்ந்து நிகழும் மாற்றங்களுக்கு சடங்குகளும், சம்பிரதாயங்களும் செய்து அதன் மீது தீட்டென்றும், புனிதமென்றும் கற்பிதங்கள் கற்பிக்கும் சமூகத்தில்தான் நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முற்போக்கு பேசும் ஊடகங்கள் கூட எங்கோ ஒரு கிராமத்தில் பூப்புனித நீராட்டு விழா, திருமணத்துக்கு செய்யப்படும் பிரம்மாண்ட சீர் வரிசைகள் பற்றிய செய்தியை ஒளிபரப்பி அறிந்தோ அறியாமலோ பெண்ணடிமைத் தனத்தை ஊக்குவித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
இவை போதாதென்று செல்லப் பிராணிகளுக்கும் மஞ்சள் நீராட்டு விழாவும், வளைகாப்பு நடத்தி ரீல்ஸ் போடும் அளவில் தான் சமூகம் இருக்கிறது. கற்பு, பெண் உடல் மீது கட்டமைக்கப்பட்ட புனித பிம்பங்கள், மாதவிடாய் தொடர்பான கட்டுக்கதைகள் ஆகியனவற்றின் மீதான ஆரோக்கிய விவாதங்களும் இல்லாமல் இல்லை. அதேவேளையில் தாய்மை அடைதல் மீதான பார்வை மீதும் கவனம் தேவை என்பதை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளார் திரைப் பிரபலம் ஒருவர். சவாலான கதைகளை, கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும், எதிலும் சற்று வித்தியாசமான பார்வையை முன்வைக்கும் நடிகை ராதிகா ஆப்தேவின் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றே இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டியது.
What's Your Reaction?