மகர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு வழிபாட்டுக்காக இன்று மாலை நடைதிறக்கப்பட்டது. நாளை அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும். உச்ச நிகழ்வாக மகரவிளக்கு பூஜை ஜன.14-ம் தேதி நடைபெற உள்ளது.

Dec 30, 2024 - 20:45
 0  4
மகர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு!

தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு வழிபாட்டுக்காக இன்று மாலை நடை திறக்கப்பட்டது. நாளை அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும். உச்ச நிகழ்வாக மகரவிளக்கு பூஜை ஜன.14-ம் தேதி நடைபெற உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்குப் பிறகு கடந்த 26-ம் தேதி நடை சாத்தப்பட்டது. பின்பு சந்நிதானம் முழுவதும் சுத்திகரிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில், வரும் ஜன.14-ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதற்காக இன்று (டிச.30) மாலையில் கோயில் நடை திறக்கப்பட்டது. தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன்ராஜீவரு ஆகியோர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோயில் நடையை திறந்தார். பின்பு ஆழிக்குண்டத்தில் ஜோதி ஏற்றினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow