புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்!

புரட்டாசி மாதத்தில் வைணவத் திருக்கோயில்களுக்கு கட்டணம் இல்லா ஆன்மிகப் பயணத்துக்கு, மூத்தக் குடிமக்கள் விண்ணப் பிக்கலாம் என்று, இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது

Aug 24, 2025 - 11:55
 0  3
புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்!

புரட்டாசி மாதத்தில் வைணவத் திருக்கோயில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிகப் பயணத்துக்கு, மூத்தக் குடிமக்கள் விண்ணப்பிக்கலாம் என்று, இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: 2025- 26ம் நிதியாண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில், புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவத் திருக்கோயில்களுக்கு ஆண்டுதோறும் 60 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்ட 1,000 பக்தர்களை ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லும் திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாண்டு 2,000 பக்தர்கள் வைணவத் திருக்கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத்தொகை ரூ.50 லட்சம் அரசு நிதியாக வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow