செயற்கை நிறமி கலந்த இனிப்புகளால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் - தீபாவளி ஹெல்த் அலர்ட்

தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டதால் லட்டு, ஜிலேபி, மைசூர்பா தொடங்கி பலவகைஇனிப்பு வகைகள் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பண்டிகை காலத்தில் பல வகை இனிப்பு, கார வகைகளை ருசிக்க அனைவரும் காத்திருக்கின்றனர்.

Nov 11, 2024 - 16:08
 0  4
செயற்கை நிறமி கலந்த இனிப்புகளால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் - தீபாவளி ஹெல்த் அலர்ட்

கோவை: தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டதால் லட்டு, ஜிலேபி, மைசூர்பா தொடங்கி பலவகைஇனிப்பு வகைகள் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பண்டிகை காலத்தில் பல வகை இனிப்பு, கார வகைகளை ருசிக்க அனைவரும் காத்திருக்கின்றனர். அதேவேளையில் அதிகளவில் செயற்கை நிறமிகள்சேர்க்கப்பட்ட இனிப்பு, கார வகைகள் அதிகளவில் சாப்பிடுவதால் ஒவ்வாமை, வயிறு உபாதைபோன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. சிலருக்கு சிலநிறமிகள் ஒவ்வாமை போன்றபாதிப்புகளை ஏற்படுத்தலாம் என உணவுப்பாதுகாப்புத் துறையும்,ஊட்டச்சத்து நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, ஊட்டச்சத்து நிபுணர் வனஜா சுதாகர் கூறியதாவது: மஞ்சள் (டார்டிராசின் - E102): லட்டு மற்றும் ஜிலேபியில் சேர்க்கப்படுகிறது. இந்த மஞ்சள் நிறத்தால் குழந்தைகளுக்கு ஒவ்வாமை, ஹைபர் ஆக்டிவ் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. ரெட் (4R - E124): இந்தநிறமிகுலாப் ஜாமூன், அல்வா ஆகியவைகளில் சேர்க்கப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு ஆஸ்துமாமற்றும் நடத்தை மாற்றம் ஆகியவை ஏற்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow