சந்தை சலுகைகள் போதும்! - கண்துடைப்பு மகளிர் தின கொண்டாட்டத்துக்கு முற்று எப்போது?

இன்றைய காலக்கட்டத்தில் கொண்டாட்டங்களுக்கு பஞ்சமில்லை, ஒவ்வொரு தினமும் கொண்டாட்டங்களாக மாறிவிட்டன. வருடத்தின் 365 நாட்களையும் கொண்டாடி தீர்க்கிறார்கள் மக்கள். அப்படி இருக்கும் பட்சத்தில், மார்ச் 8.. உலக சர்வதேச மகளிர் தினம் என்பது மட்டும் விதிவிலக்கா என்ன?

Mar 8, 2025 - 13:15
 0  5
சந்தை சலுகைகள் போதும்! - கண்துடைப்பு மகளிர் தின கொண்டாட்டத்துக்கு முற்று எப்போது?

இன்றைய காலக்கட்டத்தில் கொண்டாட்டங்களுக்கு பஞ்சமில்லை, ஒவ்வொரு தினமும் கொண்டாட்டங்களாக மாறிவிட்டன. வருடத்தின் 365 நாட்களையும் கொண்டாடி தீர்க்கிறார்கள் மக்கள். அப்படி இருக்கும் பட்சத்தில், மார்ச் 8... உலக சர்வதேச மகளிர் தினம் என்பது மட்டும் விதிவிலக்கா என்ன?, சர்வதேச மகளிர் தினமும் ஒருநாள் கொண்டாட்டமாக மிகைப்படுத்தப்பட்டு வருகிறதா?, மகளிர் தினம் என்றாலே 'ஆஃபர்ஸ்' மட்டும்தானா? இந்தச் சமூகமும், பன்னாட்டு நிறுவனங்களும் Women's Day Sale போன்ற ஆஃபரை அள்ளி கொடுத்தால் மட்டும் எல்லாம் சரியாகி விடுமா?, பெண்களை மையப்படுத்தி வியாபாரச் சந்தைகள் தந்திரமாக காய் நகர்த்தி வருவதாக தோன்றுகிறது. இது மகளிர் தினத்தின் உண்மையான நோக்கத்தை மறைக்கிறதா? என்பது குறித்து பார்க்கலாம்.

இன்று மகளிர் தினம் என்பது, அந்நாளின் முக்கியத்துவத்தை இழந்து மனமகிழ்ச்சிக்கு அல்லது கொண்டாட்டத்துக்கு மட்டுமே என சொல்லும் அளவுக்கு மாற்றப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. பெண்களை கொண்டாட ஒரு தனி தினம் இருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், அதன் பின்னால் இருக்கும் வரலாற்றையும், தற்போதுள்ள வணிகமயமாக்கலையும் சற்று கூர்ந்து பார்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், சமூகத்தில் ஆண்களை விட பெண்களை மட்டம் தட்டி பார்க்கும் மனநிலை இன்னும் அதிகமாகவே இருக்கிறது. குழந்தை பருவம், பதின்ம வயது, முதுமை காலம் என பெண்கள் பிறப்பு முதல் இறப்பு வரை இந்த சமூகத்தின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆழாகாமல் இருக்கவில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow