கடலுக்கடியில் நடந்த திருமணம் - புதுச்சேரியில் முன்முயற்சி!

புதுச்சேரியில் முதல் முறையாக கடலுக்கடியில் திருமணம் இன்று நடந்ததுள்ளது. சுமார் 40 நிமிடங்களில் கடலுக்கடியில் மோதிரம் மாற்றி திருமணம் புரிந்தனர்.

Jan 22, 2025 - 20:25
 0  5
கடலுக்கடியில் நடந்த திருமணம் - புதுச்சேரியில் முன்முயற்சி!

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல் முறையாக கடலுக்கடியில் திருமணம் இன்று நடந்ததுள்ளது. சுமார் 40 நிமிடங்களில் கடலுக்கடியில் மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டனர்.

புதுச்சேரி முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜான் டி பிரிட்டோ - தீபிகா. இருவரும் ஆழ்கடலில் திருமணம் புரிய முடிவு எடுத்தனர். இதையடுத்து ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த் துணையுடன் இன்று புதுச்சேரி தேங்காய்திட்டில் இருந்து 5 கி.மீ தொலைவில் கடலுக்குச் சென்றனர். அங்கு 50 அடி ஆழத்தில் திருமண ஏற்பாடு நடந்தது. தென்னை ஒலையில் பூக்கள் இணைத்து திருமண நிகழ்வு நடக்கும். அதை கடலுக்கடியில் அமைத்து மோதிரம் மாற்றி திருமணம் புரிந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow