உணவு சுற்றுலா: ஆந்திராவின் கோங்குரா
உணவு வகைகளைச் சுவையாகச் சாப்பிட வேண்டும் என்கிற ஆசை அனைவருக்கும் இருப்பது இயல்பானது.

உணவு வகைகளைச் சுவையாகச் சாப்பிட வேண்டும் என்கிற ஆசை அனைவருக்கும் இருப்பது இயல்பானது. ஆனால், சுவையைக் கொடுக்கும் உணவு வகைகள் ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டியது அவசியம். அப்படிச் சுவையோடு சேர்த்து ஆரோக்கியத்தையும் பரிசளிக்கும் உணவு ரகங்களைப் பட்டியலிட்டால் முன்வரிசையில் நிற்பது கோங்குரா!
நம்மூரில் புளிச்சக் கீரை! ஆந்திராவில் கோங்குரா! தமிழகத்தில் புழக்கத்தில் இருந்தாலும் பக்கத்து மாநிலமான ஆந்திராவின் பிரதான உணவு என்று முதன்மைப்படுத்தும் அளவுக்கு அங்கு கோங்குராவின் பயன்பாடு மிக அதிகம்.
What's Your Reaction?