100 பெண்களின் கும்மியாட்டம்: பஹ்ரைனில் களைகட்டிய அன்னை தமிழ் மன்றத்தின் பொங்கல் விழா கொண்டாட்டம்!

பஹ்ரைனில் பல்வேறு சமூக சேவைகள் செய்துவரும் அன்னை தமிழ் மன்றத்தின் சார்பில், பொங்கல் திருநாள் கடந்த ஜன.24ம் தேதியன்று, இந்தியன் கிளப் வளாகத்தில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. 

Jan 28, 2025 - 14:40
 0  4
100 பெண்களின் கும்மியாட்டம்: பஹ்ரைனில் களைகட்டிய அன்னை தமிழ் மன்றத்தின் பொங்கல் விழா கொண்டாட்டம்!

பஹ்ரைன்: பஹ்ரைனில் பல்வேறு சமூக சேவைகள் செய்துவரும் அன்னை தமிழ் மன்றத்தின் சார்பில், பொங்கல் திருநாள் கடந்த ஜன.24-ம் தேதியன்று, இந்தியன் கிளப் வளாகத்தில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.

இது தொடர்பாக பஹ்ரைன் அன்னை தமிழ் மன்றத்தின் தலைவர் ஜி.கே.செந்தில் பகிர்ந்த தகவல்கள்: இந்த விழாவில், உழவுக்கு உறுதுணையாக இருக்கும் கதிரவனுக்கு நன்றி சொல்லும் விதமாக புதுப்பானையில் புத்தரிசியிட்டு, வாழை தோரணங்கள் சூழ மகளிர் பொங்கல் வைத்து, குலவையிட்டு கொண்டாடி மகிழந்தனர். காண்போர் கண்கள் ரசிக்கும்படி பெண்களுக்கான கோலப்போட்டி, சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், உறியடித்தல், ஆண்கள் பெண்களுக்கான கயிறிழுக்கும் போட்டி என அனைத்திலும் மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow