யானையின் பிளிறல் எவ்வளவு தூரம் கேட்கும்? | உயிரினங்களின் மொழி - 1

காட்டுக்குள் இப்படிப் பல யானைக் கூட்டங்கள் வசித்து வருகின்றன. அவை தங்களுக்குள் பேசிக்கொள்ளும்  மொழியே  நமக்குப்  பிளிறலாகக் கேட்கிறது. குட்டி யானைகள் குறும்பானவை. அவற்றைக் கட்டுப்படுத்த, சில நேரம் பெரிய யானைகள் பிளிறும். பல கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மற்ற யானைகளுடன் அவை எப்படித் தொடர்பு கொள்கின்றன தெரியுமா? நாம் பக்கத்தில் இருப்பவர்களிடம் மெதுவாகவும், தொலைவில் உள்ளவர்களிடம்  உரக்கவும் பேசுவோம். இந்த விஷயத்தில் யானைகள் நமக்கு நேர் எதிர்.

Jan 28, 2025 - 14:00
 0  5
யானையின் பிளிறல் எவ்வளவு தூரம் கேட்கும்? | உயிரினங்களின் மொழி - 1

நிலத்தில் வாழும் மிகப் பெரிய உயிரினமான யானையைப் விரும்பாதவர்கள் இருக்க முடியாது. சிங்கம் நேருக்கு நேர் தாக்க வந்தால் யானை வென்றுவிடும். அதனால் சிங்கம் யானையின் பின்னால் இருந்துதான் தாக்கும். அவ்வளவு வலிமையானது யானை.

யானைகளை நாம் சாலைகளில், கோயில்களில், திரைப்படங்களில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்த்திருப்போம். யானை பிளிறுவதையும் கேட்டிருப்போம். ஏன் யானைகள் பிளிறுகின்றன? யானைகள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன. யானைகளின் உலகத்தில் பிளிறலும், தும்பிக்கை அசைவும், காது அசைவும் அர்த்தத்தைக் கொண்டிருக்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow