சட்டவிரோத குடியேற்ற விவகாரம்: மோடியுடன் விவாதித்து வருவதாக ட்ரம்ப் தகவல்

சட்டவிரோத குடியேற்ற விவகாரம் தொடர்பாக மோடியுடன் விவாதித்து வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி மாதம் அமெரிக்கா வர வாய்ப்புள்ளது என தெரிவித்த அவர், ‘இந்தியாவுடன் தங்களுக்கு நல்ல உறவு உள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Jan 28, 2025 - 15:05
 0  4
சட்டவிரோத குடியேற்ற விவகாரம்: மோடியுடன் விவாதித்து வருவதாக ட்ரம்ப் தகவல்

வாஷிங்டன்: சட்டவிரோத குடியேற்ற விவகாரம் தொடர்பாக மோடியுடன் விவாதித்து வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி மாதம் அமெரிக்கா வர வாய்ப்புள்ளது என தெரிவித்த அவர், ‘இந்தியாவுடன் தங்களுக்கு நல்ல உறவு உள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து ஆண்ட்ரூஸுக்குத் திரும்பும் வழியில் டொனால்டு ட்ரம்ப் நேற்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “இன்று (திங்கட்கிழமை) காலை பிரதமர் மோடியுடன் நீண்ட நேரம் பேசினேன். அவர் அடுத்த மாதம், அநேகமாக பிப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு வருவார். இந்தியாவுடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது.” என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow