“இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம்” - பாகிஸ்தான் பிரதமர்

அமைதிக்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். 

May 16, 2025 - 14:20
 0  4
“இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம்” - பாகிஸ்தான் பிரதமர்

இஸ்லாமாபாத்: அமைதிக்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கம்ரா விமானப்படை தளத்திற்கு வருகை தந்த அவர், ​​இந்தியாவுடனான சமீபத்திய ராணுவ மோதலில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் மத்தியில் பேசிய ஷெபாஸ் ஷெரீப், “அமைதிக்காக நாங்கள் (இந்தியாவுடன்) பேசத் தயாராக இருக்கிறோம். அமைதிக்கான நிபந்தனைகளில் காஷ்மீர் பிரச்சினையும் அடங்கும்” என்று கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow