ஒரு மேஜிக் கலைஞனின் வாழ்க்கை! | சினிப்பேச்சு
காமெடியன், கதையின் நாயகன் என இரண்டிலும் ரவுண்டு கட்டி நடித்து வருகிறார் யோகி பாபு. வாமா என்டர்டெயின்மென்ட் ஜாகிர் அலி தயாரிப்பில், விநீஷ் மில்லினியம் இயக்கத்தில், யோகி பாபு மேஜிக் கலைஞனாக நடித்திருக்கும் படம் ‘ஜோரா கைய தட்டுங்க’.

காமெடியன், கதையின் நாயகன் என இரண்டிலும் ரவுண்டு கட்டி நடித்து வருகிறார் யோகி பாபு. வாமா என்டர்டெயின்மென்ட் ஜாகிர் அலி தயாரிப்பில், விநீஷ் மில்லினியம் இயக்கத்தில், யோகி பாபு மேஜிக் கலைஞனாக நடித்திருக்கும் படம் ‘ஜோரா கைய தட்டுங்க’. இந்தியாவின் தலைசிறந்த கலைஞர்களில் ஒருவரான மது அம்பாட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். “தன்னுடைய அப்பாவிடமிருந்து மேஜிக் கலையைக் கற்றுக்கொள்ளும் யோகிபாபு, அவரது மறைவுக்குப் பிறகு அந்தக் கலையின் நுணுக்கங்கள் கைவரப்பெறாமல் தடுமாறு கிறார்.
ஊரே அவரை அவமானப்படுத்துகிறது. ஒரு பெண் மட்டும் அவரது திறமையின் மீது நம்பிக்கை வைக்கிறார். ஆனால், அவரைப் பல வகையிலும் முடக்கும் சிலரை அவர் என்ன செய்தார்; அவரால் மேஜிக் கலையில் சாதிக்க முடிந்ததா, இல்லையா?” என்பதுதான் கதை என்கிறார் இயக்குநர்.
What's Your Reaction?