பின்னோக்கிப் பறக்கும் ஓசனிச்சிட்டு | பறப்பதுவே 07
பறவைகளுக்குப் பொதுவாக இருக்கும் இறக்கை வகைகள் அல்லாமல், ஒரு சிறப்பான இறக்கை வகையும் உள்ளது. அது ஓசனிச்சிட்டுகளுக்கு மட்டும்தான் இருக்கிறது. மற்ற எல்லாப் பறவைகளும் முன்னோக்கி மட்டுமே செல்லும் ஆற்றல் கொண்டவை.

பறவைகளுக்குப் பொதுவாக இருக்கும் இறக்கை வகைகள் அல்லாமல், ஒரு சிறப்பான இறக்கை வகையும் உள்ளது. அது ஓசனிச்சிட்டுகளுக்கு மட்டும்தான் இருக்கிறது. மற்ற எல்லாப் பறவைகளும் முன்னோக்கி மட்டுமே செல்லும் ஆற்றல் கொண்டவை. ஆனால், ஓசனிச்சிட்டு தனது இறக்கை அடிக்கும் சாய் கோணத்தை மாற்றுவதன் மூலம், ஒரே இடத்தில் இருக்கவும், முன்னோக்கிச் செல்லவும், வேகமாகச் பின்னோக்கிச் செல்லவும் முடிகிறது.
பறவை வகைகளிலேயே இவை மிகச் சிறிய பறவைகள். சில செ.மீ. நீளமும் சில கிராம் எடையும் கொண்டுள்ளன. 5 செ.மீ. நீளமும் 2 கிராம் எடையும் கொண்ட ’தேனீ ஓசனிச்சிட்டு’ உலகின் மிகச் சிறிய பறவையாக வரையறை செய்யப்பட்டுள்ளது. ஓசனிச்சிட்டுகளால் அந்தரத்தில் இருந்து கொண்டு தேன் குடிக்க முடியும். மணிக்கு 10 கி.மீ. முதல் 30 கி.மீ. வேகத்தில் பயணம் செய்ய முடியும். நொடிக்கு 10 முதல் 80 முறை தேவைக்கு ஏற்ப சிறகடிக்கிறது.
What's Your Reaction?