அத்வைதா, வயது 256! | வரலாறு முக்கியம் மக்களே! - 15
உலகின் இரண்டாவது பெரிய பவளத்தீவு அல்டப்ரா (Aldabra). இது ஆப்ரிக்கக் கண்டத்தின் தென்கிழக்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலில் அமைந்திருக்கிறது. இது ஒரு தீவு என்பதைவிட, சில பல சிறிய பெரிய தீவுகளை உள்ளடக்கிய கூட்டம் எனலாம்.

உலகின் இரண்டாவது பெரிய பவளத்தீவு அல்டப்ரா (Aldabra). இது ஆப்ரிக்கக் கண்டத்தின் தென்கிழக்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலில் அமைந்திருக்கிறது. இது ஒரு தீவு என்பதைவிட, சில பல சிறிய பெரிய தீவுகளை உள்ளடக்கிய கூட்டம் எனலாம். ஆழமில்லா கடல் பகுதியும், மிக அழகான கடற்கரைகளும் நிறைந்தது. இங்கே காணப்படும் உயிரினங்களில் மிகவும் புகழ்பெற்றவை ராட்சச ஆமைகள். அதாவது நிலத்தில் நீண்ட காலம் நிலைத்து வாழும், தாவர உண்ணிகளான பெரிய ஆமைகள்.
உலகின் பிரம்மாண்ட ஆமைகளில் இந்த அல்டப்ரா வகை ஆமைகளும் ஒன்று. பிரிட்டிஷ் காலனியாக இந்தியா இருந்த காலத்தில், ஆங்கிலேயர்கள் அல்டப்ரா தீவுகள் பக்கம் வந்து செல்வதும், இங்கிருந்து ஆமைகளைப் பிடித்துச் சென்று யாருக்காவது பரிசாகக் கொடுப்பதும் வழக்கமாகவே இருந்தது.
What's Your Reaction?