வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? | டிங்குவிடம் கேளுங்கள்

பல ஆண்டுகளாகப் பறக்கும் தட்டில் வேற்றுகிரகவாசிகள் வருகிறார்கள்; போகிறார்கள். ஆள்களைத் தூக்கிச் சென்றுவிட்டு, மீண்டும் கொண்டுவந்து விட்டுவிடுகிறார்கள் என்று எல்லாம் சொல்லி, அவற்றுக்கு ஆதாரமாகக் காணொளிகளையும் காட்டுகிறார்கள்.

Nov 27, 2024 - 13:05
 0  2
வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? | டிங்குவிடம் கேளுங்கள்

வேற்றுகிரகவாசிகள் உண்மையிலேயே பூமியில் இருக்கிறார்களா, டிங்கு? - அ. அருணகிரி ஆதித்யன், 2-ம் வகுப்பு, லட்சுமி மில்ஸ் மெட்ரிக். பள்ளி, கோவில்பட்டி.

பல ஆண்டுகளாகப் பறக்கும் தட்டில் வேற்றுகிரகவாசிகள் வருகிறார்கள்; போகிறார்கள். ஆள்களைத் தூக்கிச் சென்றுவிட்டு, மீண்டும் கொண்டுவந்து விட்டுவிடுகிறார்கள் என்று எல்லாம் சொல்லி, அவற்றுக்கு ஆதாரமாகக் காணொளிகளையும் காட்டுகிறார்கள். ஆனால், இந்த ஆதாரங்களை எல்லாம் விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதி நவீன ஜேம்ஸ் வெப் தொலைநோக்கிகூட இதுவரை வேற்றுகிரகவாசிகள் இருப்பதாகக் கண்டறியவில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow