இந்தியாவின் மகள் | தேன் மிட்டாய் 38

‘அருணா, உனக்கேன் இந்த வீண் வேலை? வீட்டில் நிம்மதியாகக் கிடப்பதற்குப் பதில் போராடுவேன், கொடி பிடிப்பேன், கோஷம் போடுவேன் என்று எதற்காக ஆண்களுக்குச் சமமாக அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறாய்?  நீ சின்ன பெண். வாழ்க்கையில் நிறைய சாதிக்க வேண்டும்.

Jan 29, 2025 - 13:55
 0  5
இந்தியாவின் மகள் | தேன் மிட்டாய் 38

‘அருணா, உனக்கேன் இந்த வீண் வேலை? வீட்டில் நிம்மதியாகக் கிடப்பதற்குப் பதில் போராடுவேன், கொடி பிடிப்பேன், கோஷம் போடுவேன் என்று எதற்காக ஆண்களுக்குச் சமமாக அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறாய்? நீ சின்ன பெண். வாழ்க்கையில் நிறைய சாதிக்க வேண்டும். பிரிட்டிஷ்காரர்கள் பொல்லாதவர்கள். ஒரு நாள்போல் ஒரு நாள் இருக்காது.

கொத்தாகப் பிடித்துச் சென்று சிறையில் தள்ளினால் என்ன செய்வாயாம்? லத்தியால் நாலு போடு போட்டால் தாங்குவாயா? இன்னொரு வீட்டுக்குப் போய் வாழ வேண்டிய பெண். பொறுப்போடு, பத்திரமாக நடந்துகொள்ள வேண்டாமா?’ இப்படி ஆண்கள் சொன்னால் பரவாயில்லை, உன் நல்லதுக்குத்தான் சொல்கிறேன் என்று அழைத்து அமர வைத்து, பெண்களும் அல்லவா இதே அறிவுரையை வழங்குகிறார்கள்? காந்தி போகலாம். நேரு போகலாம். தாகூரும் கான் அப்துல் கானும் போகலாம். இவர்கள் ஒவ்வொருவரையும் ஆண்களின் படை பின்தொடர்ந்து செல்லலாம். ஆனால், அருணா ஆசஃப் அலி செல்லக் கூடாது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow