கார்ல் லின்னேயஸ் | விஞ்ஞானிகள் - 24
1753இல் 1,200 பக்கங்கள் கொண்ட ‘பிளாண்ட் ஸ்பீசிஸ்’ என்கிற நூலை 2 தொகுதிகளாக வெளியிட்டார். இதுதான் லின்னேயஸ் எழுதியதில் முதன்மையான நூல். அவ்வளவு தாவரங்களையும் வரிசைப்படுத்தி, வகைப்படுத்தி, பொருத்தமான பெயரையும் சூட்டியிருந்தார். விலங்கு, பறவை, மீன் எனச் சுமார் 13 ஆயிரம் உயிரினங்களுக்குப் பெயரிட்டார்.

தாவரவியலாளர். விலங்கியலாளர். மருத்துவர். உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்த முன்னோடி அறிவியலாளர். ’நவீன வகைப்பாட்டியலின் தந்தை’ என அழைக்கப்பட்டவர் கார்ல் லின்னேயஸ். உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்து துல்லியமான வகைப்பாட்டை நிறுவினார். உயிரினங்களுக்கு இரட்டைப் பெயரிடுதல் முறையை அறிமுகப்படுத்தினார்.
1707, மே 23 அன்று ஸ்வீடன் நாட்டில் பிறந்தார் கார்ல் லின்னேயஸ். இவரின் தந்தை தாவரவியலாளர் என்பதால் வீட்டைச் சுற்றித் தாவரங்கள் ஏராளமாக வளர்க்கப்பட்டிருந்தன. அதனால் லின்னேயஸுக்கும் தாவரங்கள் மீது ஈடுபாடுவந்தது. இவரின் ஆர்வத்தைக் கண்ட தந்தை, லின்னேயஸை ஊக்குவித்தார். 10 வயதில் பள்ளிக்குச் சென்றார். அங்கும் தாவரவியலில் ஆர்வம் காட்டினார். ஓர் ஆசிரியர் மருத்துவம் படிக்கப் பரிந்துரைத்தார். அதை ஏற்றுக்கொண்ட தந்தை, தனிப்பட்ட முறையில் உடலியல், தாவரவியல் படிக்க ஏற்பாடு செய்தார்.
What's Your Reaction?