எந்த வேலைக்கு எந்த வண்ணம்?
பொதுவாக மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறை களின்கீழ் உள்ள உயர் பணிகள், ‘ஒயிட் காலர் ஜாப்ஸ்’ என்று குறிப்பிடப்படுவதைக் கவனித் திருக்கலாம்.

பொதுவாக மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறை களின்கீழ் உள்ள உயர் பணிகள், ‘ஒயிட் காலர் ஜாப்ஸ்’ என்று குறிப்பிடப்படுவதைக் கவனித் திருக்கலாம். அதேபோல் அதிக உடல் உழைப்பு தேவைப்படும் பணிகள் ‘புளூ காலர் ஜாப்ஸ்’ என்று குறிப்பிடப்படுகின்றன. பெரும்பாலானோர் அறிந்தது இந்த இரண்டு வகை ‘காலர் ஜாப்ஸ்’தான். என்றாலும் வேலையின் தன்மை, ஊதியம் ஆகியவற்றைப் பொறுத்து சுமார் பத்துக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. அவற்றில் சில:
புளூ காலர்: கட்டுமானத் துறை, வேளாண்மை, விளையாட் டுத் துறையைப் போன்று திறந்தவெளியில் அதிக உடல் உழைப்பைச் செலுத் தக்கூடிய வேலைகள் ‘புளூ காலர்’ பட்டியலின் கீழ் குறிப்பிடப்படுகின்றன. தொழிற்சாலைகள், பெரு நிறுவனங்களில் மேற் கொள்ளப்படும் இயந்திரப் பணிகளும் இப்பட்டியலில் சேரும்.
What's Your Reaction?