அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வர்த்தக வரிவிதிப்புக்கு சீனா, கனடா, மெக்சிகோ பதிலடி

சீனா, கனடா, மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான  கூடுதல் வரிவிதிப்பு செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்படும் என்று ட்ரம்ப் நிர்வாகம் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட நாடுகள் பதிலடி கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளன.

Mar 4, 2025 - 15:45
 0  5
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வர்த்தக வரிவிதிப்புக்கு சீனா, கனடா, மெக்சிகோ பதிலடி

வாஷிங்டன்: சீனா, கனடா, மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான கூடுதல் வரிவிதிப்பு செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்படும் என்று ட்ரம்ப் நிர்வாகம் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட நாடுகள் பதிலடி கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளன. இது வட அமெரிக்கா முழுவதும் கடுமையான வர்த்தகப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபரின் இந்த முடிவினைக் கண்டித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இது அநீதியானது என்று தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதம் டொனால்ட் ட்ரம்ப் இந்த வரித் திட்டத்தை அறிவித்தபோது அதற்கு எதிராக ட்ரூடோ தெரிவித்திருந்த அமெரிக்கப் பொருட்களுக்கான எதிர்வரி அறிவிப்பை திங்கள்கிழமை அவர் வெளியிட்டார். அதுகுறித்து ட்ரூடோ, “முதல் கட்டமாக, கனடாவுக்குள் இறக்குமதியாகும் சுமார் 30 பில்லியன் (20.6 பில்லியன் அமெரிக்க டாலர்) கனேடியே டாலர் மதிப்புள்ள அமெரிக்க பொருள்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும். அமெரிக்கா தனது முடிவினைத் திருப்பப் பெறாதபட்சத்தில் இந்த உத்தரவு நியூயார்க் நேரப்படி நள்ளிரவு 12.01 முதல் அமலுக்கு வரும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow