“அமெரிக்காவை தொடர்புகொள்ள நாங்கள் தயார். ஆனால்...” - ரஷ்ய வெளியுறவு அமைச்சர் விவரிப்பு
"டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவுடன் தொடர்புகொள்ள ரஷ்யா தயார். ஆனால், அமெரிக்கா பக்கமே பந்து உள்ளது" என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாரோவ் தெரிவித்துள்ளார்.

மாஸ்கோ: "டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவுடன் தொடர்புகொள்ள ரஷ்யா தயார். ஆனால், அமெரிக்கா பக்கமே பந்து உள்ளது" என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாரோவ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் உரையாடியதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், ரஷ்யா அதனை திட்டவட்டமாக மறுத்தது. இந்நிலையில், தலைநகர் மாஸ்கோவில் செர்கி லாரோவ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்துடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள ரஷ்யா தயாராக உள்ளதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
What's Your Reaction?