இளையராஜா இசையில் ‘விடுதலை 2’ முதல் சிங்கிள் நவ.17-ல் ரிலீஸ்!

வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை 2’ படத்தின் முதல் சிங்கிளான ‘தினம் தினமும்’ பாடல் வரும் நவம்பர் 17-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Nov 14, 2024 - 20:30
 0  3
இளையராஜா இசையில் ‘விடுதலை 2’ முதல் சிங்கிள் நவ.17-ல் ரிலீஸ்!

சென்னை: வெற்றிமாறன் இயக்குத்தில் உருவாகிவரும் ‘விடுதலை 2’ படத்தின் முதல் சிங்கிளான ‘தினம் தினமும்’ பாடல் வரும் நவம்பர் 17-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ முதல் பாகம் கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் சூரி, விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்கள் தவிர பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உட்பட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் அடுத்த பாகத்தின் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் விஜய் சேதுபதி ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow