சிரியாவிலிருந்து 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு: லெபனான் வழியாக தாயகம் அழைத்துவர நடவடிக்கை

சிரிய கிளர்ச்சிக்குப் பின்னர் அங்கிருந்து முதல்கட்டமாக 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Dec 11, 2024 - 09:30
 0  3
சிரியாவிலிருந்து 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு: லெபனான் வழியாக தாயகம் அழைத்துவர நடவடிக்கை

புதுடெல்லி: சிரிய கிளர்ச்சிக்குப் பின்னர் அங்கிருந்து முதல்கட்டமாக 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். சிரிய தலைநகர் டமஸ்கஸ் மற்றும் லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரங்களில் இயங்கிவரும் இந்திய துணை தூதரகத்தின் முயற்சியின் மூலம் 75 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 44 பேர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்களாவர். மீட்கப்பட்ட இந்தியர்கள் பத்திரமாக லெபனான் அழைத்துவரப்பட்டனர். அவர்கள் அங்கிருந்து விமானங்கள் மூலம் இந்தியா அழைத்துவரப்படுவார்கள் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியர்களுக்கு அறிவுரை: மேலும், சிரியாவில் உள்ள இந்தியர்கள் பத்திரமாக இருக்கும்படியும், டமஸ்கஸில் உள்ள இந்திய துணைத் தூதரகத்துடன் தொடர்பில் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவசரமான சூழலில் இந்தியர்கள் +963 993385973 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். hoc.damascus@mea.gov.in என்ற இமெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் நிலவும் சூழலை கூர்ந்து கவனித்து வருவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow