காசாவில் பிணைக் கைதிகளாக இருந்த இஸ்ரேல் ராணுவத்தின் 4 பெண் வீரர்கள் விடுதலை

காசாவில் கடந்த 15 மாதங்களாக பிணைக் கைதிகளாக இருந்த இஸ்ரேல் ராணுவத்தின் 4 பெண் வீரர்களை ஹமாஸ் அமைப்பினர் நேற்று விடுவித்தனர்.

Jan 26, 2025 - 01:50
 0  2
காசாவில் பிணைக் கைதிகளாக இருந்த இஸ்ரேல் ராணுவத்தின் 4 பெண் வீரர்கள் விடுதலை

ஜெருசலேம்: காசாவில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட கத்தார் மற்றும் அமெரிக்கா சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து இருதரப்பு இடையே கடந்த 19-ம் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. அன்றைய தினம் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்ற 3 இஸ்ரேலியர்களை ஹமாஸ் அமைப்பினர் செஞ்சிலுவை சங்கம் மூலம் விடுவித்தனர். பதில் நடவடிக்கையாக பாலஸ்தீன கைதிகள் 95 பேரை இஸ்ரேல் விடுவித்தது.

இந்நிலையில் மேலும் 4 இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் செஞ்சிலுவை சங்கம் மூலம் நேற்று விடுவித்தனர். கரீனா ஆரீவ் (20), டேனிலா கிலோபா(20), நாமா லெவி (20), லிரி அல்பாக் (19) ஆகிய நான்கு பெண்களும் இஸ்ரேல் ராணுவத்தில் பணியாற்றினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow