தேசம் விடுதலை பெற்றதை வானொலியில் அறிவித்த தமிழ் செய்தி வாசிப்பாளர் காலமானார்!

கடந்த 1947, ஆகஸ்ட் 16-ம் தேதி அன்று காலை 5.45 மணி அளவில் ‘ஆல் இந்தியா ரேடியோ’வில் இந்திய தேசம் விடுதலை பெற்றதை தமிழ் மக்களுக்கு அறிவித்த செய்தி வாசிப்பாளரான ஆர்.எஸ்.வெங்கட்ராமன் காலமானார்.

Feb 7, 2025 - 11:30
 0  3
தேசம் விடுதலை பெற்றதை வானொலியில் அறிவித்த தமிழ் செய்தி வாசிப்பாளர் காலமானார்!

சென்னை: கடந்த 1947, ஆகஸ்ட் 16-ம் தேதி அன்று காலை 5.45 மணி அளவில் ‘ஆல் இந்தியா ரேடியோ’வில் இந்திய தேசம் விடுதலை பெற்றதை தமிழ் மக்களுக்கு அறிவித்த செய்தி வாசிப்பாளரான ஆர்.எஸ்.வெங்கட்ராமன் காலமானார். அவருக்கு வயது 102.

சுமார் 70, 80 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் வானொலி மற்றும் செய்தித்தாள்கள் தான் இந்திய மக்களுக்கு பல்வேறு செய்திகளை வெளியிட்டு வந்தது. அது வானொலியின் பொற்காலம் என்றும் சொல்லலாம். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் இருந்து தேசம் சுதந்திரம் காண வேண்டுமென விடுதலை போராட்டங்கள் நடைபெற்ற சூழலில் இந்தியாவுக்கு ஆங்கிலேயர்கள் விடுதலை கொடுத்தனர். அந்த பொன்னான செய்தியை லட்சோப லட்ச தமிழர்களுக்கு தனது குரல் மூலம் அறிவித்தவர் ஆர்.எஸ்.வெங்கட்ராமன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow