கீழடி போல் வெம்பக்கோட்டையிலும் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்கப்படுமா?

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வந்த அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதுவரை சுமார் 13 ஆயிரம் பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன

Jun 21, 2025 - 17:25
 0  4
கீழடி போல் வெம்பக்கோட்டையிலும் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்கப்படுமா?

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வந்த அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதுவரை சுமார் 13 ஆயிரம் பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதனால் கீழடி போல் வெம்பக்கோட்டையிலும் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்கப்படுமா என வரலாற்று ஆய்வாளர்கள் எதிர்பாப்பில் உள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. குறிப்பாக வெம்பக்கோட்டை வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் அமைந்த விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் ஏராளமான வரலாற்று எச்சங்கள் கிடைத்தன. இதனால் அங்கு அகழாய்வு நடத்த வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி முதலாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 2022 செப்டம்பர் மாத இறுதிவரை இப்பணிகள் நடைபெற்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow