தேசம் கடந்த நேசம்: இந்தியரை மணந்த பிரேசில் பெண்ணின் வைரல் பதிவு!
சாதி, மதம், மொழி, கலாச்சாரம், இனம், நாடு உள்ளிட்டவற்றை கடந்து வரும் காற்றை போல காதலையும் சுவாசிப்போம் என ‘ஷாஜகான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற வசனத்தை அனைவரும் கேட்டிருப்போம்.

சென்னை: சாதி, மதம், மொழி, கலாச்சாரம், இனம், நாடு உள்ளிட்டவற்றை கடந்து வரும் காற்றை போல காதலையும் சுவாசிப்போம் என ‘ஷாஜகான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற வசனத்தை அனைவரும் கேட்டிருப்போம். அதற்கு பல காதலர்கள் வாழும் உதாரணமாக உள்ளனர். அப்படி காதலில் விழுந்து திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர் பிரேசிலை சேர்ந்த ஒரு பெண்ணும், இந்தியாவை சேர்ந்தவொரு ஆணும்.
அவர்களது காதல் கதையை பிரேசிலை சேர்ந்த அந்தப் பெண் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தேசம் கடந்த அவர்களது நேசத்தின் ‘லவ் ஸ்டோரி’ இப்போது சமூக வலைதள பயனர்கள் மத்தியில் வைரலாகி உள்ளது. பலரும் அந்தப் பதிவை லைக் செய்து, பாசிட்டிவ் கமெண்ட் செய்தும் பாராட்டி உள்ளனர்.
What's Your Reaction?