மாமன், மருமகன் உறவை கொண்டாடும் ‘வழுக்கு மரம் ஏறும் போட்டி’ - வத்தலக்குண்டு அருகே சுவாரஸ்யம்

வத்தலக்குண்டு அருகே மருமகன்கள் வழுக்கு ஏற மாமன்கள் தடுக்க என வழுக்கு மரம் ஏறும் போட்டி சுவாரசியமாய் நடைபெற்றது.  

Jan 15, 2025 - 20:15
 0  4
மாமன், மருமகன் உறவை கொண்டாடும் ‘வழுக்கு மரம் ஏறும் போட்டி’ - வத்தலக்குண்டு அருகே சுவாரஸ்யம்

திண்டுக்கல்: வத்தலக்குண்டு அருகே மருமகன்கள் வழுக்கு ஏற, மாமன்கள் தடுக்க என வழுக்கு மரம் ஏறும் போட்டி சுவாரசியமாய் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே ப.விராலிப்பட்டி கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாமன் முறை உள்ளவர்களால் நட்டு வைக்கப்பட்ட வழுக்கு மரத்தில் மருமகன் முறை உள்ளவர்கள் ஏறும் வினோத விளையாட்டு போட்டி இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. போட்டியில் மாமன் முறை உள்ளவர்கள் வழுக்கு மரத்தை ஊன்றி அதன் உச்சியில் 11,000 ரூபாயை தொங்க விட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow