பறவைகளின் இறகுகளில் ஓவியம் - உடுமலை கலைஞருக்கு குவியும் பாராட்டு
சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் எனக்கு ஆர்வம் அதிகம். எஸ்எஸ்எல்சி வரை படித்த நிலையில், குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை கைவிட வேண்டிய சூழல் நேர்ந்தது. தற்போது எலெக்ட்ரீசியனாக உள்ளேன்.

உடுமலை: பறவைகளின் இறகுகளை தூரிகைகளாக பயன்படுத்தி ஓவியம் வரைவது எளிது, ஆனால் இறகுகளைக் கொண்டே ஓவியம் வரைவது என்பது அழகான, கடினமான கலையாகும். உடுமலை ராமசாமி நகரில் வசிக்கும் சசிக்குமார் (28) என்பவர் இறகுகளை பயன்படுத்தி அற்புதமான ஓவியங்களை வரைந்து பார்வையாளர்களின் பாராட்டை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: வெவ்வேறு நிறங்களில், வடிவங்களில் மற்றும் அளவுகளில் பறவைகளின் இறகுகள் சுற்றுப்புறங்களில் கிடக்கும். உதாரணமாக மயிலின் இறகுகள் பிரகாசமான வண்ணங்களையும், கழுகின் இறகுகள் வலிமையான அமைப்பையும் கொண்டிருக்கும். பறவைகளின் இறகுகளைக் கொண்டு வரையப்படும் ஓவியங்களுக்கு வண்ணத்தாள் அல்லது கேன்வாஸ், பசை, கத்தரிக்கோல், கத்தி உள்ளிட்டவை மூலப்பொருட்களாக பயன்படுகின்றன.
What's Your Reaction?