உடலுக்கு கேடு தராத ‘புரதச் சத்து மாவு’ தயாரிப்பது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்

ஆண், பெண் என இரு பாலரும் சம அளவில் புரதச் சத்து உணவு உட்கொள்ளலாமா? அல்லது இருவருக்கு உட்கொள்ளும் அளவில் ஏதேனும் குறிப்பிட்ட அளவு உள்ளதா? இறைச்சி வகையான புரதச் சத்துகள் உட்கொள்ளலாமா?

Jul 3, 2025 - 21:05
 0  3
உடலுக்கு கேடு தராத ‘புரதச் சத்து மாவு’ தயாரிப்பது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்

ஆண், பெண் என இரு பாலரும் சம அளவில் புரதச் சத்து உணவு உட்கொள்ளலாமா? அல்லது இருவருக்கு உட்கொள்ளும் அளவில் ஏதேனும் குறிப்பிட்ட அளவு உள்ளதா? இறைச்சி வகையான புரதச் சத்துகள் உட்கொள்ளலாமா? அல்லது காய்கறி வகையான புரதச் சத்துகள் உட்கொள்ளலாமா? - இவ்வாறு புரதச் சத்து குறித்து பல கேள்விகள் எழலாம். இதற்கு எளிய விளக்கத்துடன், எளிய முறையில் சரிவிகித ‘புரதச் சத்து மாவு’ தயாரிக்கும் வழிமுறைகளையும் விவரிக்கிறார் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தீபா.

“புரதச் சத்து என்பது நமது உடலை கட்டமைக்க மிக முக்கிய தேவைகளில் ஒன்று. உடலில் ஏற்படும் காயங்கள் குணமாக புரதச் சத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், இது உடலுக்கு தேவையான அத்தியாவசிய அமினோ அமிலம். பொதுவாக நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு நபர் ஒரு கிலோவுக்கு 8 கிராம் என்கிற விகிதம் அளவில் புரதச் சத்தை உட்கொள்ள வேண்டும். இது ஒருவரின் உடல் எடையை பொறுத்து உட்கொள்ளும் அளவில் மாற்றம் இருக்கலாம். ஒருவேளை அதிகப்படியான புரதச் சத்து உட்கொள்வது, நமது சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow