உணவு சுற்றுலா: நீலகிரி வொயிட் டீ
பால் சேர்க்காமல் அப்படியே தயாரிக்கப்பட வேண்டிய தேநீரில் தேவைப்படுபவர்கள் கொஞ்சம் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம். புதினா இலைகளைக் கசக்கி மேற்தூவிப் பருக அட்டகாசமாக இருக்கும்.

அண்மைக்காலமாக உடல் நலன் மீது விழிப்புணர்வு அதிகரித்த பிறகு மக்கள் அடிக்கடி உச்சரிக்கும் சொல் ‘கிரீன் டீ’. பால் சேர்த்து காபி, தேநீர் குடிப்பவர்கள்கூட, ‘நான் கிரீன் டீக்கு மாறிட்டேன்…’ என்று சொல்லும் அளவுக்கு ‘கிரீன் டீ’ குறித்த விழிப்புணர்வு பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதே வரிசையில் இப்போது அதிகம் பிரபலம் அடையத் தொடங்கியிருப்பது ‘வொயிட் டீ’.
வொயிட் டீ குறித்தும் அதில் உள்ள நலக்கூறுகளைப் பற்றியும், அதன் வரலாறு குறித்தும் தெரிந்துகொண்ட பின்பு, நீலகரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேயிலைத் தோட்டங்களைப் பார்வையிட்டோம். நீலகிரியின் உச்சியான தொட்டபெட்டாவில் புகழ்பெற்ற ஊட்டி தேயிலைத் தொழிற்சாலையில் கூடுதல் கவனம் வைத்தோம். தேயிலை இந்தியாவுக்குள் நுழைந்த பாதை, தேயிலைத் தயாரிப்பு முறைகள் ஆகியவை பற்றித் தெரிந்துகொண்டு ‘வொயிட் டீ’ பற்றிய கூடுதல் விஷயங்களைச் சேகரிக்கத் தொடங்கினோம்.
What's Your Reaction?