நூற்றாண்டை கடந்த மக்கள் சேவையில் ஏனங்குடி ஆரம்ப சுகாதார நிலையம்!

நாகை மாவட்டம் திருமருகல் அருகே ஏனங்குடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நூறு ஆண்டுகளைக் கடந்தும், மக்களின் நோய் தீர்க்கும் சேவையை தொடர்ந்து வருகிறது.

Jan 6, 2025 - 18:05
 0  4
நூற்றாண்டை கடந்த மக்கள் சேவையில் ஏனங்குடி ஆரம்ப சுகாதார நிலையம்!

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் திருமருகல் அருகே ஏனங்குடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நூறு ஆண்டுகளைக் கடந்தும், மக்களின் நோய் தீர்க்கும் சேவையை தொடர்ந்து வருகிறது. நாகை மாவட்டத்தில் ஏராளமான தனியார் மருத்துவமனைகள் இருந்தாலும், ஏழை, எளியோர் சிகிச்சை பெற அரசு மருத்துவமனைகளையே நாடுகின்றனர்.

அந்தவகையில் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தினமும் சராசரியாக 100-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow