திருஉத்தரகோசமங்கை மரகத நடராஜர் ஆருத்ரா தரிசன விழா - பக்தர்கள் தரிசனம்
திருஉத்தரகோசமங்கை மரகத நடராஜர் ஆருத்ரா தரிசன விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ராமநாதபுரம்: திருஉத்தரகோசமங்கை மரகத நடராஜர் ஆருத்ரா தரிசன விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கையில் ஆதி சிதம்பரம் எனப்படும் மிகப் பழமையான மங்களேஸ்வரி உடனுறை மங்களநாதர் கோயில் உள்ளது. இங்கு தனி சன்னதியில் நடராஜர் எழுந்தருளியுள்ளார். ஆறு அடி உயரமுள்ள ஒற்றை பச்சை மரகத கல்லாலான நடராஜர் சிலை ஆண்டு முழுவதும் சந்தனம் பூசி பாதுகாக்கப்படுகிறது. இங்கு மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவிற்கு முந்தைய நாள் ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும் சந்தனம் களையப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் சந்தனக்காப்பு களைந்த பின் நடராஜரை ஒரு நாள் மட்டுமே திருமேனியாய் தரிசிக்க முடியும். அதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்வர்.
What's Your Reaction?