சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர தரிசனத்துக்கான முன்பதிவு தொடக்கம்
சபரிமலையில் மாதாந்திர வழிபாட்டுக்காக வரும் 14-ம் தேதி மாலை நடை திறக்கப்பட உள்ளது. இதற்காகத் தரிசன ஆன்லைன் முன்பதிவுகள் தொடங்கி உள்ளன.

தேனி: சபரிமலையில் மாதாந்திர வழிபாட்டுக்காக வரும் 14-ம் தேதி மாலை நடை திறக்கப்பட உள்ளது. இதற்காகத் தரிசன ஆன்லைன் முன்பதிவுகள் தொடங்கி உள்ளன.
ஐயப்பன் சிலை பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சபரிமலையில் ஒருநாள் வழிபாட்டுக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து இன்று (ஜூன் 5) அதிகாலை முதல் வழக்கமான வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. சிறப்புப் பூஜைகளுக்குப் பின்பு இன்று இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட உள்ளது.
What's Your Reaction?