வத்தலகுண்டு அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற கோயில் திருவிழா: கொட்டும் மழையிலும் நள்ளிரவில் நடந்த கறிவிருந்து

வத்தலகுண்டு அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோட்டை கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவில் ஆடுகள் பலியிடப்பட்டு கொட்டும் மழையிலும் திறந்தவெளியில் விடிய விடிய கறி விருந்து நடைபெற்றது. 

Nov 11, 2024 - 15:43
 0  5
வத்தலகுண்டு அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற கோயில் திருவிழா: கொட்டும் மழையிலும் நள்ளிரவில் நடந்த கறிவிருந்து

வத்தலகுண்டு: வத்தலகுண்டு அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோட்டை கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவில் ஆடுகள் பலியிடப்பட்டு கொட்டும் மழையிலும் திறந்தவெளியில் விடிய விடிய கறி விருந்து நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே தருமத்துப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது கோட்டை கருப்பண்ணசாமி கோயில். இங்கு ஆண்டு தோறும் ஆயுதபூஜையை அடுத்து திருவிழா நடைபெறுவது வழக்கம். ஒரு நாள் இரவு மட்டும் இந்த திருவிழா நடைபெறும். அதன்படி நேற்று இரவு கருப்பண்ணசாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கோயில் முதன்மைக்காரர்கள் உள்ளிட்ட ஆண்கள் ஒன்று கூடி கோட்டை கருப்பணசாமிக்கு பொங்கல் வைத்து படைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow