ஏழுமலையான் கோயிலுக்கு பல வளர்ச்சிப் பணிகள் செய்த ஸ்ரீ கிருஷ்ண தேவராயரின் 495-வது நினைவு தினம் அனுசரிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள், விஜயநகர பேரரசர்  கிருஷ்ண தேவராயர், காக்கதீயர்கள், சாளுக்கியர்கள், சுல்தான்கள்,ஆற்காடு நவாபுகள், மஹந்துக்கள்என பலர் ஆட்சியிலும் எவ்வித சிதிலமும் அடையாமல் பாதுகாக்கப்பட்டது

Nov 11, 2024 - 15:43
 0  3
ஏழுமலையான் கோயிலுக்கு பல வளர்ச்சிப் பணிகள் செய்த ஸ்ரீ கிருஷ்ண தேவராயரின் 495-வது நினைவு தினம் அனுசரிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள், விஜயநகர பேரரசர் ஸ்ரீ கிருஷ்ண தேவராயர், காக்கதீயர்கள், சாளுக்கியர்கள், சுல்தான்கள்,ஆற்காடு நவாபுகள், மஹந்துக்கள்என பலர் ஆட்சியிலும் எவ்வித சிதிலமும் அடையாமல் பாதுகாக்கப்பட்டது.

இதில், ஸ்ரீ கிருஷ்ண தேவராயர், திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி கோட்டையிலும் வாசம்செய்துள்ளார். அவர் விஜயநகரத்தில் இருந்து சந்திரகிரிக்கு வரும் போதெல்லாம், திருமலைக்கு தனது பட்டத்து ராணிகளான திருமல தேவி மற்றும் சின்னமாதேவி ஆகியோருடன் திருமலைக்கு பல்வேறு காணிக்கைகளுடன் நடந்து சென்று சுவாமியை தரிசிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இவ்வாறு ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் 7 முறை திருமலைக்கு சென்று சுவாமியை தரிசித்துள்ளார். அவர் கோயிலுக்கு தங்க நைவேத்திய அண்டாக்கள், வைர கிரீடம், ஆபரணங்களை காணிக்கையாக வழங்கி உள்ளார். மேலும், மூலவருக்கு பொற்காசுகளால் சுவர்ணாபிஷேகமும் செய்துள்ளார் எனகல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளதாக மைசூரு தொல்பொருள் ஆய்வு மைய கல்வெட்டு துறை ஆய்வாளர் முனிரத்தினம் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow