சூடாமணி புத்த விகாரில் அகழாய்வு செய்ய ட்ரோன் மூலம் சர்வே பணி தொடக்கம்!
சோழ சாம்ராஜ்யத்தின் வரலாற்றுச் சுவடுகளை மீட்டெடுக்கும் விதமாக, நாகையில் பொன்னியின் செல்வன் என்ற ராஜராஜ சோழன் காலத்துக்கு சாட்சியாக உள்ள சூடாமணி புத்த விகாரில் அகழாய்வு செய்ய முதற்கட்டமாக ட்ரோன் மூலம் சர்வே செய்யும் பணியை தமிழக அரசு நேற்று தொடங்கியுள்ளது.

நாகப்பட்டினம்: சோழ சாம்ராஜ்யத்தின் வரலாற்றுச் சுவடுகளை மீட்டெடுக்கும் விதமாக, நாகையில் பொன்னியின் செல்வன் என்ற ராஜராஜ சோழன் காலத்துக்கு சாட்சியாக உள்ள சூடாமணி புத்த விகாரில் அகழாய்வு செய்ய முதற்கட்டமாக ட்ரோன் மூலம் சர்வே செய்யும் பணியை தமிழக அரசு நேற்று தொடங்கியுள்ளது. நாகையில் கி.பி. 10 முதல் 13-ம் நூற்றாண்டு வரை பிற்கால சோழர்களின் ஆட்சிக்காலத்தில் புத்தம், சமண, சமயங்களுக்கு ஆதரவு அளிக்கப்பட்டு வந்ததாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.
அதன்படி, கிடாரம் (தற்கால வடக்கு மலேசியா) பகுதியைச் சேர்ந்த வணிகர்கள் வியாபாரத்துக்காக சோழ நாட்டின் நாகை துறைமுகத்துக்கு வந்திறங்கியபோது, அங்கு பாதுகாப்பாக தங்குவதற்கும் வழிபாடு நடத்துவதற்கும் மாமன்னன் ராஜராஜ சோழன் அனுமதியுடன் புத்த விகார் கட்டப்பட்டது.
What's Your Reaction?