புத்தாண்டு சபதங்களை உடைக்காமல் உடற்பயிற்சி, உணவு பழக்கங்கள்... - சில ஆலோசனைகள்
2025 புத்தாண்டு இனிதே புதிய நம்பிக்கையிடன் பிறந்துவிட்டது. அப்றம் என்ன.... ‘இந்த ஆண்டுக்கான உங்கள் ரெசல்யூஷன் என்ன?’ என்பதுதான் அதிகம் கேட்கப்படும் கேள்வி என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமான ரெசல்யூஷன் இருக்கும். குறிப்பாக ‘நான் டயட் இருந்து ஸ்லிம் ஆக போகிறேன், போன் பார்ப்பதை குறைக்க போகிறேன், நல்ல சம்பளத்துக்கு வேறு கம்பெனிக்கு மாற வேண்டும்’ என்பார்கள்.

2025 புத்தாண்டு இனிதே புதிய நம்பிக்கையுடன் பிறந்துவிட்டது. அப்றம் என்ன... ‘இந்த ஆண்டுக்கான உங்கள் ரெசல்யூஷன் என்ன?’ என்பதுதான் அதிகம் கேட்கப்படும் கேள்வி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமான ரெசல்யூஷன் இருக்கும். குறிப்பாக ‘நான் டயட் இருந்து ஸ்லிம் ஆக போகிறேன், போன் பார்ப்பதை குறைக்க போகிறேன், நல்ல சம்பளத்துக்கு வேறு கம்பெனிக்கு மாற வேண்டும்’ என்பார்கள். இதில் ஹைலைட்டான் ஒன்று என்னவென்றால், ‘இந்தப் புத்தாண்டில் எப்படியாவது நான் ஜிம்மில் சேர வேண்டும்’ என்பதுதான்.
எப்படியாவது முட்டிமோடி ஓன்றை செய்து விட நினைப்போம். ஆனால், அதற்கும் பல முட்டுக்கட்டைகள் உடனே வந்து நிற்கும். இன்றைய கால கட்டத்தில் உடல் பருமன் (obesity) குறித்தான விளம்பரங்களும் வீடியோக்களும் அடிக்கடி கண்களில் தென்பட்டுக்கொண்டே இருக்கின்றன. மூலை முடுக்கெல்லாம் ஜிம்கள், கருத்தரிப்பு மையங்களாக பெருகிவிட்டன. உடல் பருமனைக் குறைப்பதற்கான பாதுகாப்பான வழிமுறைகளில் முக்கியமானது டயட்.
What's Your Reaction?